• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 மே மாதத்தில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றுக்குரியதாக அனர்த்தத்திற்குப் பின்னரான மதிப்பீட்டு அறிக்கை
- 2016 மே மாதத்தில் இலங்கையில் சில பிரதேசங்களுக்கு 18 வருடங்களின் பின்னர் பதிவு செய்யப்பட்ட ஆகக்கூடிய மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றதோடு, இதன் காரணமாக 24 மாவட்டங்களில் கடும் வௌ்ளப்பெருக்கு நிலைமையும் அதேபோன்று இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய மண்சரிவு அடங்கலாக பல மண்சரிவுகளும் நிகழ்ந்தன. இந்த அனர்த்தத்தின் காரணமாக 493,319 பேர்கள் பாதிக்கப்பட்டதோடு, 93 மரணங்கள், 33 காயப் பட்டவர்கள், 117 காணாமற்போனோர்கள் எனவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனர்த் நிலைமைகளின் பின்னர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய சர்வதேச தரப்பினர்களினதும் உரிய அமைச்சுக்களினதும் ஒத்துழைப்புடனும் அனர்த்தத்துக்கு பின்னரான தேவைகள் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின் மூலம் முன்ஆயத்தப்பணிகளை பலப்படுத்துவதற்கும் அனர்த்த மற்றும் காலநிலை நிலைமைகள் காரணமாக உருவாகக்கூடிய ஆபத்தான நிலைமையை குறைப்பதற்கும் நீண்டகாலத் திட்டம் பிரேரிக்கப் பட்டுள்ளது. இதற்கமைவாக அனர்தத்திற்கு பின்னரான இந்த மதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் அனர்த்த முகாமைத்துவத்திற்கான விரிவான செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்று 2018 - 2023 ஐந்து வருட காலத்திற்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.