• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் பொது நோக்கங்களுக்காக புகையிரத ஒதுக்கங்களை குத்தகைக்களித்தல்
- புகையிரத தொழிற்பாட்டு, அபிவிருத்தி நோக்கங்களுக்கு உடனடியாக தேவைப்படாத புயைிரத திணைக்களத்தின் கட்டுக்காப்பில் உள்ள காணிகளை அதன் தேவைகளுக்கு பின்னர் பெற்றுக்கொள்வதற்கு தடையேதும் ஏற்படாதவாறு, அரசாங்கத்தின் மதிப்பீட்டு பெறுமதியின் அடிப்படையில் ஐந்து (05) வருடங்களுக்கு மேற்படாத காலப்பகுதியின் சார்பில் மூன்றாம் தரப்பிற்கு புகையிரத திணைக்களத்தினால் குத்தகைக்களிப்பட்டு வருகின்றது. அச்சந்தர்ப்பங்களில் அத்தகைய காணிகளில் நீர் குழாய்களைப் பதித்தல் மற்றும் மின்சார கருத்திட்டங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாடுகளுக்கான பொது நோக்கங்களின் பொருட்டு அரசாங்க நிறுவனங்களுக்கு குத்தகைக்களிக்கும் போது அரசாங்கத்தின் மதிப்பீட்டுக்கமைவாக ஒருதடவை மாத்திரம் அறவிடப்படு வதற்காக நிர்ணயிக்கப்படும் குத்தகைத் தொகையிலிருந்து ஒரு சதவீதமான பெயரளவு பெறுமதியையும் ஏற்புடையதான நிருவாக செலவுகளையும் மாத்திரம் அறவிடும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.