• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பாவனைக்காக 03 கப்பல்களை பெற்றுக் கொள்ளல்
- இலங்கைக்குச் சொந்தமான சுமார் 517,000 சதுர கிலோ மீற்றர் கொண்ட சமுத்திர வலயத்தை கண்காணிக்கும், அனர்த்தத்திற்கு உள்ளானவர்களை காப்பாற்றும் அதேபோன்று சட்டம் மற்றும் ஒழுங்கினை பேணும் பணிகள் சார்பில் தேவையான மேற்பார்வையினை மேற்கொள்ளும் பணியானது இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக கரையோரத்திற்கு அப்பாலும் ஆழ் கடலிலும் பயன்படுத்தக்கூடிய கப்பல்கள் இந்த திணைக்களத்தில் இருக்க வேண்டியது அவசியமானதாகும். இதற்கமைவாக இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்காக 85 மீற்றர் நீளமான 03 கரைக்கு அப்பாலான கண்காணிப்பு கப்பல்களை Colombo Dockyard PLC கம்பனியினைக் கொண்டு நிருமாணித்துக் கொள்வதற்கு உரியதான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.