• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிருமாண இயந்திரசாதன இயக்குநர்களை பயிற்றுவிக்கும் மத்திய நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- நிருமாண கைத்தொழிலின் ஆகக்கூடிய பயனைப் பெறுவதற்காக பயிற்றப்பட்ட இயந்திரசாதன இயக்குநர்களினால் நிருமாண இயந்திர சாதனங்களை பயனுள்ள வகையில் இயக்குவது அத்தியாவசியமானதாகும். 1982 ஆம் ஆண்டில் அநுராதபுரம், கல்குளம பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ள நிருமாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் இயங்கும் நிருமாண இயந்திரசாதன இயக்குநர்களை பயிற்றுவிக்கும் மத்திய நிலையமானது நிருமாணிப்பு கைத்தொழிலுக்குத் தேவையான ஆள்வலுவை வழங்கும் முதன்மை நிறுவனமொன்றாகும். உள்நாட்டு நிருமாணிப்புக் கைத்தொழிலின் நிலையான அபிவிருத்தி, உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு நிருமாணக் கைத்தொழிலின் அதிகரித்துவரும் பயிற்றப்பட்ட ஆள்வலுத் தேவையை நிறைவு செய்வதற்குமாக நிருமாண கைத்தொழில் இயந்திரசாதன இயக்குநர்களை பயிற்றுவிக்கும் மத்திய நிலையத்திற்கு செய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி பற்றிய விரிவான திட்டமொன்றின் கீழ் இனங்காணும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.