• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீனவ சமூகம் சார்பில் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- கரையோர மற்றும் நன்னீர் மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ள மீனவ சமூகத்தின் வாழ்க்கை நிலையை உயர்த்தும் பொருட்டு வாழ்வாதார அபிவிருத்தி உட்பட வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு சார்பில் 1,200 மில்லியன் ரூபா கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சுக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அதிகூடிய முன்னுரிமை வழங்கி நடைமுறைப்படுத்த வேண்டுமென அமைச்சினால் இனங்காணப்பட்டுள்ள 30 கருத்திட்டங்களை இந்த நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி தனியார் துறையினரினதும் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.