• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகள்
- இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கும் கம்பனி செயலாளர்களாக பதிவு செய்து கொள்வதற்கு இடமளித்து, 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 527 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட 2016‑12‑20 ஆம் திகதியிடப்பட்டதும் 1998/11 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட "கம்பனிகள் (செயலாளர்கள் தொடர்பிலான ) கட்டளைகளை" அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.