• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் பிணைகளுக்கான யூரோ - இசைவாக்க (Euro Clearing) முறை
- வெளிநாட்டு முதலீட்டாளர்களை கூடுதலாக கவருவதற்காக திறைசேரி பிணை சந்தை வசதிகளை மேம்படுத்துவது அத்தியாவசியமானதாகும். அரசாங்கத்தின் பிணைகளை வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கிடையில் பிரச்சித்தப்படுத்து வதற்கும் கொடுக்கல் வாங்கல்களின் உட்சிக்கல் நிலைமையை குறைப்பதற்கும் செலவுகளை குறைப்பதற்கும் திறந்த மற்றும் நெகிழ்ச்சிகரமான வசதியொன்றாக யூரோ - இசைவாக்க (Euro Clearing) முறையானது உதவும். இதற்கமைவாக, பல்வேறுபட்ட முதலீடு அடிப்படையொன்றை நிருமாணித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் பிணைச்சந்தைக்கு நேரடியாக தடையற்ற அணுகலை ஏற்பாடு செய்யும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் பிணைகளுக்காக யூரோ - இசைவாக்க (Euro Clearing) முறைமையை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான உள்நாட்டு சட்ட மற்றும் ஒழுங்குறுத்துகை கட்டமைப்பொன்றை தாபிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.