• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடன் தகவல் சேவை வழங்குநர் சட்டமூலம்
- கடன் விண்ணப்பதாரரின் முன்னைய கடன் தொடர்பிலான விபரங்களை அடிப்படையாகக் கொண்டு மிகச் சிறந்த தீர்மானங்களுக்கு வருவதன் மூலம் கடன் முதலீடுகளின் நிலைமையை விருத்தி செய்து கொள்ளலாம். அதேபோன்று கடன் செலுத்துகைகளை தவறும் போக்கும் இதன் மூலம் குறைவடையுமென்பதனால் கடனுக்கான செலவுகள் குறைவடைவதோடு, அதன் நலனை கடன் பெறுபவர்களுக்கு வழங்க முடியும்.

தற்போது இலங்கையில் கடன் தகவல்களை வழங்குவதற்கு அதிகார தத்துவம் பெற்ற ஒரே நிறுவனம் இலங்கை கடன் தகவல் பணியகமாகுமென்பதோடு, தனியார் கடன் தகவல் வழங்குநர்கள் மூலம் சந்தை பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தக்கூடிய சாதகமான தாக்கம் அரசாங்கத்தினால் இனங்காணப் பட்டுள்ளது. இதற்கமைவாக செம்மையான கடன்தகவல்களை சேகரித்தல், விநியோகித்தல் சார்பி்ல் கடன் தகவல் சேவைகள் வழங்குநர்களுக்கு உரிமப் பத்திரங்களை வழங்குவதற்கும் அவர்களை ஒழுங்குறுத்துவதற்கும் கண்காணிப்ப தற்கும் உரியதாக ஏற்பாடுகளை செய்வதற்குமாக தயாரிக்கப்பட்டுள்ள "கடன் தகவல் சேவை வழங்குநர் சட்டமூலத்தை" வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.