• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு டி சொய்சா மகளிர் வைத்தியசாலையில் சிசுக்களுக்கான விசேட நவீன மத்திய நிலையமொன்றைத் தாபித்தல்
- கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு அண்மையில் கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள "கொழும்பு டி சொய்சா மகளிர் வைத்தியசாலை" மூலம் தாய், பிரசவ மற்றும் பெண் நோயியல், குழந்தையின்மை, சிறுவர் சிகிச்சை உட்பட குடும்பநலத் திட்டம் சம்பந்தமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே போன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்படிப்பு அபேட்சகர்களுக்கும் பட்டப்பின் படிப்பு அபேட்சகர்களுக்கும் பயிற்சியளிப்பதற்கும்கூட இந்த வைத்தியசாலை பங்களிப்பினை நல்குகின்றது. டி சொய்சா மகளிர் வைத்தியசாலையில் நிகழும் குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை அதே போன்று உட்சிக்கல் நிலைமை காரணமாக வேறு வைத்தியசாலைகளிலிருந்து மாற்றப்படும் தாய்மார்களினதும் குழந்தைகளினதும் எண்ணிக்கையும் உயர்வாக காணப்படுகின்றமையினால் இந்த வைத்திய சாலையின் வளர்ச்சி குன்றிய குழந்தைப் பிரிவையும் விசேட சிகிச்சை குழந்தைப் பிரிவையும் மேம்படுத்துவதும் விரிவுபடுத்துவதும் முக்கிய தேவையொன்றாக நிலவுகின்றதோடு, இதன்சார்பில் நிதி பெற்றுக் கொள்வதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, டி சொய்சா மகளிர் வைத்தியசாலையில் சிசுக்களுக்கான சிகிச்சை மற்றும் நிபுணத்துவ குழந்தை சிகிச்சை சேவைகளின் தரத்தினை மேம்படுத்துவதற்குமாக சிசுக்களுக்கான விசேட நவீன நிலையமொன்றைத் பிரான்ஸ் அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்த வைத்தி்யசாலையில் நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.