• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய வைத்தியசாலையை சகல வசதிகளுடன் கூடிய நவீன வைத்தியசாலையொன்றாக அபிவிருத்தி செய்தல்
- நாட்டின் சுகாதார உபசரிப்பு சேவை முறைமையின் முக்கிய நிலையமாக கருதக்கூடியதும் 3,382 படுக்கைகளைக் கொண்டதுமான இலங்கை தேசிய வைத்தியசாலையை நீண்டாகால அபிவிருத்தி திட்டமொன்றை பின்பற்றி முழுமையான நவீன வைத்தியசாலையொன்றாக அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையாகும். இந்த அபிவிருத்தி செயற்பாட்டின் ஒரு பகுதியாக துரிதமாக பூர்த்தி செய்யப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ள பின்வரும் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* நோயாளிகளுக்கும் பணியாட்டொகுதியினருக்கும் விரிவான வசதிகளை ஏற்பாடு செய்யும் விதத்தில் பழைய விக்டோரியா கட்டடத்தையும் பண்டாரநாயக்க கட்டடத்தையும் நவீனமயப்படுத்தல்.

* பான்ஸ் பிளேசில் அமைந்துள்ள மருத்துவர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களையும் 93 ஆம் இலக்க மனையிடத்தில் அமைந்துள்ள தாதிமார்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களையும் நவீனமயப்படுத்தல்.