• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டு திட்டத்தின் கீழ் மனித உயிர்ச் சேதங்களுக்காக செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்தல்
- காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக ஆள் ஒருவர் மரணிக்கின்றதன் விளைவாக குறித்த அந்த ஆளில் தங்கி வாழ்ந்தோர் பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகின்றனர். அத்தகைய சந்தர்ப்பத்தில் மரணித்த ஆளில் தங்கி வாழ்ந்தோருக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகையொன்றை செலுத்துவதன் மூலம் ஓரளவுக்காவது அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் சார்பிலும் வீடு மற்றும் சொத்துக்களின் சேதங்கள் சார்பிலும் வழங்கப்படும் இழப்பீட்டு எல்லைகளை அதிகரிப்பதற்கு அண்மையில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளினால் ஏற்படும் இழப்புகளுக்கு நட்டஈடு செலுத்தும் முறையை மேலும் திருத்தி, காட்டு யானை தாக்குதல் காரணமாக நிகழும் ஆள் ஒருவரின் மரணம் அல்லது முழுமையான இயலாமை சார்பில் செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையை 200,000/- ரூபாவிலிருந்து 500,000/- ரூபா வரை அதிகரிக்கும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.