• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொறகஹகந்த - களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்தினால் பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களிடமிருந்து சுவீகரிக்கப்படும் காணி களுக்காக மதிப்பீட்டு பெறுமதிக்கு மேலதிகமாக நட்டஈட்டுத் தொகை யொன்றை வழங்குதல்
- மொறகஹகந்த - களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்தினால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அவர்களிட மிருந்து சுவீகரிக்கப்படும் காணிகளின் மதிப்பீட்டு பெறுமதிக்கு மேலதிகமாக 50 சதவீதமான நட்டஈட்டுத் தொகையொன்றை, 2016-2019 இடைப்பட்ட நான்கு (04) வருட காலப்பகுதிக்குள் தவணைகளாக செலுத்தும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீர்த் தேக்கத்திற்குள் மூழ்கும் காணிகளின் உரிமையாளர்களுக்கு உருவாகியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, குறித்த மேலதிக நட்டஈட்டுத் தொகையை 2017 மற்றும் 2018 ஆகிய இரண்டு (02) வருட காலப்பகுதிக்குள் முழுமையாக செலுத்தி பூர்த்தி செய்யும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.