• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு 1000 புதிய பயணிகள் பேருந்துகளை கொள்வனவு செய்தல்
- தற்போது பொது போக்குவரத்து சேவையானது வினைத்திறமை மற்றும் நம்பிக்கை குறைந்துள்ளதன் காரணமாக பொது மக்களில் பெரும்பாலானோர் அவர்களுடைய அன்றாடப் போக்குவரத்து தேவைகளுக்காக பொது போக்குவரத்துக்குப் பதிலாக சொந்த போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பழகியுள்ளனர். இந்த நிலைமை நகர வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களை அதிகரிப்பதற்கும் வளி மாசடைவதற்கும் அதேபோன்று எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரிப்பதற்கும் காரணமாய் அமைந்துள்ளது. வினைத்திறன் மிக்கதும் நம்பகத்தன்மை வாய்ந்ததும் வசதிகள் கூடியதுமான பொது போக்குவரத்து சேவையொன்றை உருவாக்குவதன் மூலம் சொந்த வாகனங்களை பயன்படுத்தி நகரத்திற்கு வரும் பெரும்பாலானோரை பொது போக்குவரத்து சேவையின்பால் கவர்ந்திழுக்க முடியும். அபோன்று புகையிரத மற்றும் பஸ் சேவைகளை திட்டவட்டமான நேர அட்டவணைக்கு அமைவாக ஒன்றிணைப்பதன் மூலம் பொது போக்குவரத்து சேவை முறைமையானது முழுமையாக அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும். இதற்கமைவாக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்வண்டிகளை நவீனமயப்படுத்துவதற்காகவும் போக்குவரத்துத் தேவைகளுக்குப் போதுமானவாறு நடாத்திச் செல்வதற்காகவும் இந்திய கடன் வழியின் கீழ் 40-46 (2x2) உயரமான பின்புற இருக்கைகள் கொண்ட 900 புதிய பயணிகள் பேருந்து களையும் அடித்தளம் பதிவான குளிரூட்டப்பட்ட 100 பேருந்துகளையும் கொள்வனவு செய்யும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.