• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் ஈடுபடுத்துவதற்காக விசேடமாக பயிற்றப்பட்ட 20 மோப்ப நாய்களை கொள்வனவு செய்தல்
- விமானப் பயணிகள், பணியாட்டொகுதியினர், கையாள்கை பணியாட்டொகுதியினர் மற்றும் பொது மக்கள் அடங்கலாக சிவில் விமான சேவையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவது அரசாங்கங்கள் அனைத்தினதும் பொறுப்பாகும். அத்தகைய பாதுகாப்பு வழிமுறையொன்றாக வெடிக்கும் பொருட்கள், சுடுபடைக்கலங்கள், போதைப் பொருட்கள், பணம் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் என்பவற்றை இனங்காணக்கூடிய பயிற்றப்பட்ட மோப்ப நாய்களையும் அதனை கையாள்பவர்களையும் ஈடுபடுத்துவது மிகப்பிரயோசனமானதாகும். இதற்கமைவாக, பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் கையாள்கைப் பணிகளின் பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் 20 நாய்க்குட்டிகளை கொள்வனவு செய்து பயிற்றுவித்து பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் விமான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.