• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க பிணையங்கள் சந்தைக்கு தகவல் தொழினுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் முறைமையொன்றை கொள்வனவு செய்தல்
- அரசாங்கத்தின் பிணையங்கள் சந்தையை விரிவுபடுத்துதல், அதன் பணிகளின் வௌிப்படைத் தன்மையை மேம்படுத்துதல், விலைகளின் ஆய்வுகளின் மூலம் அரசாங்கத்திற்கு நலன்களைப் பெற்றுக் கொள்ளல் போன்ற நோக்கங்களைக் கொண்டு அரசாங்க பிணையங்கள் சந்தை சார்பில் அதிநவீன மின்னணு வர்த்தக முறைமையொன்றுடனான தகவல் தொழினுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் முறைமையொன்றை கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கொள்வனவில் நிலவும் உட்சிக்கல் நிலைமையை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இதன் சார்பில் அரசாங்க கொள்வனவு வழிகாட்டல் கோவைக்கு அமைவாக, இரட்டைமுறை கேள்விகோரும் அடிப்படையில் பிரேரிப்புகளை அழைக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.