• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1999 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுகததாச தேசிய விளையாட்டு தொகுதி அதிகாரசபைச் சட்டத்தை திருத்துதல்
- சுகததாச தேசிய விளையாட்டு தொகுதி அதிகாரசபையினால் நிருவகிக்கப்படும் விளையாட்டுத் தொகுதிகளில் விளையாட்டு வசதிகள் மிகுந்த சலுகை விலைகளின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றது. இதிலிருந்து கிடைக்கும் வருமானமானது இந்த விளையாட்டுத் தொகுதிகளை உரிய முறையில் பராமரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டாலும், அவற்றின் தற்போதைய வருமானமானது அதற்கு போதுமானதாகவில்லை.

இதற்கமைவாக, இந்த விளையாட்டுத் தொகுதிகளைப் பராமரிப்பதற்கும் விளையாட்டு வசதிகளை வழங்குவதற்குமாக போதுமான வருமானத்தினை ஈட்டிக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் விளையாட்டுப் போட்டிகளுக்காக உரிய விளையாட்டுத் தொகுதிகள் பயன்படுத்தப்படாத சந்தர்ப்பங்களில் கலைநிகழ்ச்சிகள், சம்மேளனங்கள், பரீட்சைகள் உட்பட அத்தகைய வருமானம் கிடைக்கக்கூடிய நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கும் நோக்கில் நடைமுறைக்கு ஏற்றவாறு திருத்தங்களை உள்ளடக்கி 1999 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுகததாச தேசிய விளையாட்டு தொகுதி அதிகாரசபைச் சட்டத்தை திருத்துவதற்காக வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.