• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் முத்திரைகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பொருட்களை வெளிநாட்டு முத்திரை சேகரிப்பவர்களுக்கு விற்பனை செய்தல்
- 1967 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட முத்திரை பணியகத்தினால் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முத்திரை சேகரிப்பாளர்களுக்கு முத்திரை மற்றும் அதுசார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வருகின்றன. முக்கியமாக முத்திரை சேகரிக்கும் வௌிநாட்டவர்களுக்கு முத்திரை விற்பனை செய்வதன் மூலம் அந்நிய செலாவணி ஈட்டிக் கொள்ளலாமென்பதோடு, முத்திரைகளில் காட்டப்பட்டுள்ள நாட்டின் சுற்றாடல், இயற்கைஎழில், புராதன இடங்கள், காட்டு மிருகங்கள், பறவைகள் போன்ற காட்சிகளின் காரணமாக வௌிநாட்டு முத்திரை சேகரிப்பாளர்கள் உல்லாசப் பயணிகளாக நாட்டுக்கு வருகைதரும் போக்கும் உள்ளது. இதற்கமைவாக, இலங்கையின் முத்திரைகளை வௌிநாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விற்பனை செய்யும் வௌிநாட்டு முகவர்கள் இருப்பது தேவையானதொன்றாகும் என்பதோடு, அத்தகைய முகவர்களை நியமித்துக் கொள்வதற்கும் அவர்களுடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்குமாக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.