• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர்ப்பாசன முறைமையின் உற்பத்தி திறனையும் வினைத்திறனையும் மேம்படுத்தும் கருத்திட்டம்
- நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தல், கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கு நாட்டிலுள்ள நீர்பாசனத் திட்டங்களின் வினைத்திறனை மேம்படுத்துவது அத்தியாவசிய பணியொன்றாகும். இதற்கமைவாக, உத்தேச "உற்பத்தி திறனை அதிகரிக்கும் மற்றும் நீர்ப்பாசன முறைமையை வினைத்திறனுடன் மேம்படுத்தும் கருத்திட்டம்" மூலம் கடந்த 25-35 வருட காலப்பகுதிக்குள் மறுசீரமைக்கப்படாத பிரதான மற்றும் நடுத்தர 80 நீர்ப்பாசனத் திட்டங்கள் முற்றுமுழுதாக மறுசீரமைக்கப்படவுள்ளன. அதேபோன்று நிலம் மற்றும் நீர் நுகர்வின் வினைத்திறனை மேம்படுத்துதல், விவசாயிகளை பலப்படுத்துதல் என்பன மூலம் பயிர்ச் செய்கை நிலங்களின் உற்பத்தித்திறன் மேம்படுமென்பதோடு, சுமார் 98,000 விவசாயக் குடும்பங்களின் வருமானமும் அதிகரிக்கும். இந்தக் கருத்திட்டத்தை 18,500 மில்லியன் ரூபா செலவில் 2017-2021 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.