• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய விமான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்ட மொன்றையும் தேசிய விமான போக்குவரத்து வசதிகளை வழங்கும் குழுவொன்றையும் தாபித்தல்
- உடன்படிக்கைகள் செய்துகொண்டுள்ள நாடுகளுக்கிடையில் விமான கையாள்கைகளுக்கு வசதிகளை வழங்குதல் அதேபோன்று குடிவரவு, தொற்று தடைகாப்பு, சுங்கம் மற்றும் இசைவாக்க சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் காலதாமதங்களை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக பின்பற்றப்பட வேண்டிய தரங்கள் உட்பட சிபாரிசு செய்யப்பட்டுள்ள 452 செயற்பாடுகள் சருவதேச சிவில் விமான சேவைகள் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அவற்றுக்கு இயைவாக குறித்த தரங்கள் மற்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள் உள்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு சருவதேச சிவில் விமான சேவைகள் சமவாயத்தின் தரப்பு நாடொன்றாக இலங்கை அரசாங்கமும் கட்டுப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த தரங்கள் மற்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள் இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஏனைய உரிய அமைச்சுக்களினதும் நிறுவனங்களினதும் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் "தேசிய விமான போக்குவரத்து வசதிகளை வழங்கும் குழுவொன்றை“ நியமிப்பதற்கும் "தேசிய விமான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சித்திட்டமொன்றையும்" வகுத்தமைத்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை இந்தக் குழுவுக்கு கையளிப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.