• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சட்டபூர்வமற்ற விதத்தில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதும் சந்தையில் புழக்கத்திலுள்ளதுமான மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகை காலத்தை நீடித்தல்
- அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய வரிகள் செலுத்தப்படாது சட்டபூர்வமற்ற விதத்தில் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 450cc எஞ்சின் ஆற்றல் வரையிலான மோட்டார் சைக்கிள்கள் இயந்திரத்தின் கன ஆற்றலுக்கு அமைவாக உரிய மேல் விதிப்பு வரிகளை அறவிட்டுக் கொள்வதற்கு உட்பட்டு, 2017‑01‑31 ஆம் திகதி வரை பதிவு செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியினுள் உரிய மேல் விதிப்பு வரி செலுத்தப்பட்டு 1.558 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு மேலும் சுமார் 2,500 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்குரிய பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகை காலத்தை 2017‑01‑31 ஆம் திகதியிலிருந்து 2017‑03‑31 ஆம் திகதி வரை மேலும் இரண்டு (02) மாத காலத்திற்கு நீடிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.