• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிரிய ஆலோசகர் சேவையை தாபித்தல்
- ஆசிரியர் ஆலோசகர் பதவியானது 1962 ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பாடசாலை முறைமையில் உள்ளதோடு, பாடசாலை கல்வியின் தரத்தினை பாதுகாப்பதில் ஆசிரியர் ஆலோசகர்களினால் மெச்சத்தக்க சேவை மேற்கொள்ளப்படுகின்றது. ஆசிரியர் ஆலோசகர் சேவையை முறையாக பெற்றுக் கொள்ளும் நோக்கில் "இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை" என்னும் புதிய சேவையொன்றைத் தாபிப்பதற்கும் தற்போது ஆசிரியர் ஆலோசகர்களாக கடமையாற்றும் ஆசிரியர்களை புதிய சேவைக்கு உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குமாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.