• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறையில் றைகம கைத்தொழில் மற்றும் தொழினுட்ப அபிவிருத்தி சிறப்பு வலயமொன்றைத் தாபித்தல்
- களுத்துறை மாவட்டத்தின் றைகம பிரதேசத்தில் கைத்தொழில் மற்றும் தொழினுட்ப அபிவிருத்தி சிறப்பு வலயமொன்றைத் தாபிப்பதற்காக ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை துரிதமாக ஆரம்பிக்கும் நோக்கில், இந்த சிறப்பு வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தத்தை பொதுவான கேள்வி நடவடிக்கைமுறையிலிருந்து விலகி, அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனியொன்றான மத்திய பொறியியல் சேவைகள் (தனியார்) கம்பனிக்கு வழங்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.