• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகளை கொள்வனவு செய்தல்
- சில புற்றுநோய் வகைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Bevacizumab தடுப்பூசிகள் 100 மி.கி / 4 மி.லீ புட்டிகள் 3,750 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.