• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சருவதேச விமான நிலைய அபிவிருத்தி கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - தொலை நிறுத்துகை முனைவிடம் மற்றும் துணை ஓடுபாதை நிருமாணிப்பு
- பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தினால் 2016 ஆம் ஆண்டில் 9.5 மில்லியன் விமானப் பயணிகள் கையாளப்பட்டதோடு, 2020 ஆம் ஆண்டளவில் 14.5 மில்லியன் விமானப் பயணிகளை கையாளவேண்டி வரலாமென எதிர்வு கூறப்படுகின்றது. இந்த விமான நிலையத்தில் பயணிகளை கையாளும் ஆற்றலை ஆண்டொன்றில் 15 மில்லியன் விமானப் பயணிகள் வரை அதிகரிப்பதற்கும் விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன் உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் பண்டாரநாயக்க சருவதேச விமான நிலைய அபிவிருத்தி கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் "தொலை நிறுத்துகை முனைவிடம் மற்றும் துணை ஓடுபாதை" நிருமாணிப்புக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.