• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சார்க் அமைப்பைச் சார்ந்த நாடுகளின் சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய அமைச்சர்களின் 08 ஆவது கூட்டத்தையும் செயலாளர்களினதும் குடிவரவு உத்தியோகத்தர்களின் கூட்டத்தையும் இலங்கையில் நடாத்துதல்
- சார்க் அமைப்பைச் சார்ந்த நாடுகளின் சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய அமைச்சர்களின் 08 ஆவது கூட்டத்தையும் அதற்கு ஒருங்கிணைவாக நடாத்தப்படும் சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய அமைச்சுக்களின் செயலாளர்களின் கூட்டத்தையும் சார்க் நாடுகளின் குடிவரவு உத்தியோகத்தர்களின் கூட்டத்தையும் இலங்கையில் நடாத்துவதற்கும் அதற்கு அனுசரணை வழங்குவதற்குமாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.