• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக தற்காலிக பாதுகாப்பு நிலையங்களின் நிருவாகம்
- பல்வேறுபட்ட துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும், அதன் மூலம் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் தேவையுள்ள பெண்களுக்கு சட்ட உதவி, ஆலோசனை அல்லது பிற சேவைகளை வழங்குவதற்கு மேலதிகமாக நிவாரண நிலையங்களை / தற்காலிக பாதுகாப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதற்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அரசாங்கத்தினால் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு நிலையங்கள் நிருமாணிக்கப்பட்டிருந்த போதிலும் தகைமைபெற்ற வளவாளர்களின் பற்றாக்குறை காரணமாக அவற்றின் நிருவாக பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கமைவாக இத்தகைய தற்காலிக பெண்கள் பாதுகாப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதில் அனுபவமுள்ள அரசசார்பற்ற அமைப்புகளை இணைத்துக் கொண்டு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நடாத்திச் செல்வதற்கும் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு நிலையங்களை அரசசார்பற்ற நிறுவனங்களினால் நிருவகிக்கப்பட்டுவரும் கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள தற்காலிக பெண்கள் பாதுகாப்பு நிலையங்களுக்கு அரச அனுசரணை வழங்குவதற்குமாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.