• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மலர்ச் செய்கையின் ஊடாக உயர் வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெண்களை பலப்படுத்துதல்
- பெண்கள் மற்றும் யுவதிகள் சார்பில் சுயதொழில்களை உருவாக்குவதன் மூலம் கிராமிய மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் மலர்ச் செய்கையானது பாரிய பங்களிப்பினை வழங்கும். மலர்ச் செய்கையின் மூலம் இலங்கை 2015 ஆம் ஆண்டில் 18 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட ஏற்றுமதி வருமானமொன்றை ஈட்டியுள்ளதோடு, அதனை மேலும் விரிவுபடுத்தும் சாத்தியமும் நிலவுகின்றது. தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம் மாவட்ட மட்டத்தில் மலர்ச் செய்கை அபிவிருத்தி செயற்பாடுகளில் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ளதோடு, தற்போது 17 மாவட்டங்களில் 173 "சுவஹஸ் மலர்ச் சங்கங்களை" தாபித்துள்ளது. இதற்கமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களையும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்த்து, மலர்ச் செய்கை துறைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், தொழினுட்ப தகவல்கள், உயர் நடுகைப் பொருட்கள், பயிர்ச் செய்கை பயிற்சி உட்பட விற்பனை உதவி என்பனவற்றை வழங்கி, சிறிய மற்றும் நடுத்தர மலர்ச் செய்கையாளர்களை முக்கியமாக மலர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள பெண்களைப் பலப்படுத்துவதனை குறியிலக்காகக் கொண்டு மலர்ச் செய்கை துறையை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை 228.5 மில்லியன் ரூபா செலவில் 2017-2021 ஐந்து வருடகாலப் பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.