• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் கமத்தொழில் துறையை நவீனமயப்படுத்துதலும் இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டை பலப்படுத்துதலும்
- "இலங்கையில் கமத்தொழில் துறையை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்" மற்றும் "இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்" ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக முறையே 30 மில்லியன் யூரோக்களையும் 14.5 மில்லியன் யூரோக்களையும் கொண்ட உதவித் தொகையொன்றை வழங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, இதற்கமைவாக ஐரோப்பிய யூனியனுடன் அதற்குரியதான நிதி உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.