• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்க வலையமைப்பு கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்தைக் கையளித்தல்
- அதிவேக மற்றும் பாதுகாப்பான இணைய இணைப்புகளை அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கு வதன் மூலம் மக்களுக்கும் வர்த்தக சமூகத்திற்கும் அரசாங்க சேவைகளை தடையின்றி துரிதமாக வழங்கும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மையினால் நடைமுறைப்படுத்தப்படும் Lanka Government Network கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான சேவைகளை வழங்குவதற்குரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் இலங்கை ரெலிக்கொம் கம்பனிக்கு வழங்கும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.