• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹசலக்க நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- ஹசலக்க நீர்வழங்கல் கருத்திட்டத்தின் மூலம் 33 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தழுவப்பட்டு 12,500 புதிய குழாய்நீர் இணைப்புகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, இதன்மூலம் பொது மக்கள் சுமார் 49,370 பேர்கள் நலன் பெறுவர். பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் ஹசலக்க நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.