• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டில் "சுக்கித்த புரவர" நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்குரிய கருத்திட்டங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதலும் புதிய கருத்திட்டங்களை ஆரம்பித்தலும்
- மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் முழுநாட்டையும் தழுவும் விதத்தில் நடைமுறைப்படுத்தும் "சுக்கித்த புரவர" நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டில் 64 நிருமாணிப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட நியாயமான காரணங்களினால் 2016 நிதியாண்டு முடிவடைவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய முடியாமற்போன சில கருத்திட்டங்களையும் 2017 ஆம் ஆண்டு சார்பில் இனங்காணப்பட்டுள்ள புதிய கருத்திட்டங்களையும் 2017 நிதியாண்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.