• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் எதியோப்பிய சமஷ்டி சனநாயக குடியரசுக்கும் இடையில் ராஜதந்திர கலந்துரையாடல்கள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- ஐக்கிய நாடுகளின் சமவாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மூல தத்துவங்களின் மீது இரு நாடுகளுக்குமிடையில் சம்பிரதாய நட்புறவையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்திக் கொள்ளும் அத்துடன் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் எதியோப்பியாவுக்கான விஜயத்தின் போது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் எதியோப்பிய சமஷ்டி சனநாயக குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் ராஜதந்திர கலந்துரையாடல்கள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.