• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் மண்சரிவு அனர்த்தத்தை தடுக்கும் கருத்திட்டத்தின் கீழ் சிவில் வேலை ஒப்பந்த பொதிகள் இரண்டினை வழங்குதல்
- யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் வழங்கப்படும் நிதியத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப்படவுள்ள "தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் மண்சரிவு அனர்த்தத்தை தடுக்கும் கருத்திட்டத்தின் 01 ஆம் 02 ஆம் ஒப்பந்த பொதிகளின் கீழ் வீதி அனர்த்த முகாமைத்துவத்திற்காக மத்திய, ஊவா மற்றும் சப்பிரகமுவ ஆகிய மாகாணங்களில் 16 இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மண்சரிவு அனர்த்தத்தை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு உரியதான சிவில் வேலைகளுக்கான நிருமாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.