• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கூட்டு வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் 2 ஐ நடைமுறைப்படுத்துதல்
- வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சுமார் 4.000 கிலோமீற்றர் வீதிகளை புனரமைப்பதற்கும், மேம்படுத்துவத்றகும் பராமரிப்பதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக உத்தேச கூட்டு வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரியதான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.