• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தரமான விதைகளை இறக்குமதி செய்தல்
- நாட்டின் பயன்பாட்டுக்குத் தேவையான பெரிய வெங்காய தேவையிலிருந்து சுமார் 65% - 70% இற்கு இடைப்பட்ட அளவு வருடாந்தம் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது. ஆதலால் உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பதன் பால் உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் (2016-2018) கீழ் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்காக அலகு நில அளவொன்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் விளைச்சலின் அளவை அதிகரித்துக் கொள்ளவும் கூடிய உற்பத்தி திறன் கொண்ட விதை பாவனையை பிரபல்யப்படுத்தவும் வேண்டியுள்ளது. இந்த நாட்டின் பெரிய வெங்காய விதையின் வருடாந்த தேவை சுமார் 40,000 கிலோ கிராமாக இருந்த போதிலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது இதன் அரை பங்கு மாத்திரமாகும். மீதித் தொகையானது தனியார் துறையின் ஊடாக நாட்டினுள் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காய விதைகளின் தரம் தொடர்பிலான பிரச்சினைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக உயர் தரம் வாய்ந்த 6,200 கிலோ கிராம் விதை வெங்காயம் இந்திய ஆராய்ச்சி நிறுவனமொன்றான "National Horticultural Research and Development Foundation" நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்வதன் மூலம் பெரிய வெங்காய விதைக்கான உள்நாட்டுத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.