• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றாடல் நட்புறவுமிக்க சுழற்சி நிதிய கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (e-Friends II Revolving Fund)
- சருவதேச ஒத்துழைப்புக்கான யப்பான் வங்கியின் உதவியின் கீழ் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட "சுற்றாடல் நட்புறவுமிக்க சுழற்சி நிதிய கடன் திட்டத்தின்“ கீழ் சுழற்சி நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டுள்ள மீதி நிதியையும் பொதுத் திறைசேரியினால் 2017 ஆம் ஆண்டு சார்பில் இதற்காக குறித்தொதுக்கப்பட்டுள்ள 1,300 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டையும் பயன்படுத்தி "சுற்றாடல் நட்புறவுமிக்க சுழற்சி நிதிய கடன் திட்டம் (e-Friends II Revolving Fund)” நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் விரயத்தைக் குறைத்தல், சக்தி சேமிப்பு உட்பட சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றுக்கு கைத்தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல் என்னும் இந்த கடன் திட்டத்தின் நோக்கத்தினை வெற்றி கொள்வதற்காக பொருத்தமான பயனாளிகளுக்கு இதன் கீழ் கடன் வழங்கப்படும் என்பதை உறுதி செய்யும் பொருட்டு பயனாளிகளை இனங்காணும் பொருத்தமான வழிமுறையொன்றை வகுத்தமைப்பதற்காக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.