• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யால தேசிய பூங்காவிற்கு அண்மையில் சொகுசு சுற்றுலா முகாம்களை நிருமாணித்தல்
- உயர் வருமானம் பெறும் உல்லாசப் பயணிகளை கவருவதை குறியிலக்காகக் கொண்டு சுற்றாடல் நட்புறவு மிக்க சொகுசு சுற்றுலா முகாம்களை நிருமாணிக்கும் பொருட்டு யால தேசிய பூங்காவிற்கு அண்மையில் பலட்டுபான பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியிலிருந்து ஏழு ஏக்கர் விஸ்தீரணமுடைய காணி Wild Coast Lodge (Pvt.) Ltd. கம்பனிக்கு 2012 ஆம் ஆண்டில் குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தை திட்டமிட்டவாறு வெற்றிகரமாக மேற்கொள்வதற்குத் தேவையான 155 பேர்ச்சர்ஸ் கொண்ட மேலதிக காணித் துண்டொன்றை இந்தக் கம்பனிக்கு 50 வருட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கும் உரிய நிருமாணிப்பு வேலைகளைச் செய்யும் போது கரையோர பாதுகாப்பு, கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் அங்கீகாரத்தையும் வனவுயிர் பாதுகாப்புத் திணைக்களத்தின் சிபாரிசையும் பெற்றுக் கொள்ளுமாறும் குறித்த நிருமாணிப்புகளை செய்யும் போது உரிய அரசாங்க நிறுவனங்களின் சிபாரிசுகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த கம்பனிக்கு பணிப்பு விடுப்பதற்குமாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.