• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாலி நாட்டில் அமைதிகாக்கும் செயற்பாட்டிற்காக ஈடுபடுத்தப்படும் இலங்கை தரைப்படையின் படைபிரிவுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
- மாலி நாட்டில் அமைதிகாக்கும் செயற்பாட்டிற்காக இலங்கை தரைப்படையின் படைபிரிவுவொன்றை அனுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அதன் உடன்பாட்டினை தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இந்த படைபிரிவுக்குத் தேவையான பொருட்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்காக ரஷ்யா வங்கியொன்றுடன் (SBERBANK) கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.