• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனித உரிமைகள் பற்றிய தேசிய செயற்பாட்டுத் திட்டம் - 2017 - 2021
- "மனித உரிமைகள் பற்றிய தேசிய செயற்பாட்டுத் திட்டம் - 2017 - 2021” ஐ தயாரிக்கும் பொருட்டும் அதன்போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய சகல விடயங்களையும் பரிசீலனை செய்யும் பொருட்டும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினதும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சரினதும் நீதி அமைச்சரினதும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினதும் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் மனித உரிமைகள் பற்றிய அமைச்சுகளுக்கிடையிலான குழுவொன்றைத் தாபிப்பதற்கு அமைச்சரவையினால் கடந்த ஆண்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக இந்த அமைச்சுகளுக்கிடையிலான குழுவின் ஆலோசனைகள் மற்றும் உரிய தரப்பினர்களின் விரிவான பங்குபற்றுதலுடன் வரையப்பட்டுள்ள "மனித உரிமைகள் பற்றிய ஐந்து (05) வருடகால தேசிய செயற்பாட்டுத் திட்டம் - (2017 - 2021)“ பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் அமைச்சரவையினால் இந்த திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.