• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்புல ஆற்றுகைக்கலைகள் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை உயர் தொழினுட்ப கல்வி நிறுவனத்திற்காக நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்க ளுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
- கட்புல ஆற்றுகைக்கலைகள் பல்கலைக்கழகத்தின் கட்புல கலைப்பீடத்திற்கு கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும் நில அழகுபடுத்தலுக்கும் உரிய ஒப்பந்தத்தையும் காலி, கம்பஹா, கண்டி, குருநாகல் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள உயர் தொழினுட்ப நிறுவனங்களின் கல்வி மற்றும் நிருவாக கட்டடங்களை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.