• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் யுக்ரேன் மற்றும் டென்மார்க் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் கப்பலோடிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை அங்கீகரித்தல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்
- தேர்ச்சி சான்றிதழுடனான கப்பலோடி ஒருவருக்கு வௌிநாட்டுக் கொடி ஒன்றின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள கப்பலொன்றில் சேவையாற்றுவதற்காக குறித்த தேர்ச்சி சான்றிதழுக்கு (Certicate of Competency) மேலதிகமாக உரிய கப்பலை பதிவு செய்துள்ள அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதற்குச் சமமான தரச்சான்றிதழைப் (Certicate of Recognition) பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். இத்தகைய சமமட்டத்திலான சான்றிதழ்களை வழங்குவதற்காக உரிய நாடுகளுக்கு இடையில் சமவாயமொன்றையோ அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றையோ செய்து கொண்டிருத்தல் வேண்டுமென்பதோடு, ஏற்கனவே இலங்கை 30 வௌிநாடுகளுடன் இத்தகைய உடன்படிக்கைகளைச் செய்து கொண்டுள்ளது. இத்தகைய உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதன் மூலம் தேர்ச்சி சான்றிதழ் பெற்ற இலங்கை கப்பலோடிகள் பெரும்பாலானோருக்கு வௌிநாட்டுக் கப்பல்களில் சேவையாற்றும் தொழில்வாய்ப்பு திறந்திருக்கும். இந்த சான்றிதழ்கள் வழங்குவது சம்பந்தமாக இலங்கையுடன் உடன்படிக்கை யொன்றை செய்து கொள்வதற்கு யுக்ரேன் அரசாங்கமும் டென்மார்க் அரசாங்கமும் விருப்பம் தெரிவித்துள்ளதோடு, இதற்கமைவாக யுக்ரேன் மற்றும் டென்மார்க் அரசாங்கங்களுடன் சமுத்திர தேர்ச்சி சான்றிதழ்களை அங்கீகரித்தல் சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.