• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டத்தின் கீழ் விதித்துரைக்கப்படும் சிறிய வணிக கப்பல்களை ஒழுங்குறுத்தும் கட்டளைகள்
- சிறிய வணிக கப்பல்களின் மூலம் செய்யப்படும் கடல்சார்ந்த பணிகள் சார்பில் தற்போது இலங்கையில் பாரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சுற்றுலாத்துறை மேம்பாட்டுடன் கப்பல்கள் மூலம் செய்யப்படும் பிரயாணிகள் போக்குவரத்து உட்பட சுற்றுலாத்துறை பணிகளில் குறிப்பிடத்தக்க விருத்தியும் நிகழ்ந்துள்ளது. இந்த சிறிய வணிகக் கப்பல்களின் பதிவுசெய்தலையும் ஒழுங்குறுத்தலையும் முறைப்படுத்தும் நோக்கில் 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டத்தின் கீழ் “சிறிய வணிக கப்பல்களை ஒழுங்குறுத்தும் கட்டளைகளை" விதித்துரைக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.