• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யான்ஓயா நீர்தேக்க அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கென காணிகள் சுவீகரிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களை இணைத்து நடைமுறைப்படுத்தப்படும் யான்ஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டத்தின் நிருமாணிப்புப் பணிகளின் சுமார் 85 சதவீதம் ஏற்கனவே முடிவடைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்ப ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கருத்திட்டம் காரணமாகப் பாதிக்கப்படும் சுமார் 242 குடும்பங்களை அவர்கள் குடியிருக்கும் இடங்களிலிருந்து துரிதமாக வௌியேற்ற வேண்டியுள்ளது. இதற்கமைவாக, இந்தக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கை நிலையினை வழங்கும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளுக்குப் புறம்பாக அவர்கள் தற்போது குடியிருக்கும் வீடுகளின் தன்மைக்கு ஏற்றவாறு அடிப்படைத் தேவைகளுடனான வசதியுடன் கூடிய வீடுகளை நிருமாணித்துக் கொள்வதற்கு நிதி உதவிகளை வழங்குதல், சுவீகரிக்கப்படவுள்ள அரசாங்கக் காணிகளில் சட்ட விரோதமாக அபிவிருத்தி செய்து அனுபவித்து வருபவர்களுக்கு உரிய வழிமுறைக்கு அமைவாக நட்டஈடு வழங்குதல், கருத்திட்டத்தின் நிருமாணிப்புக் காரணமாக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைச் செய்வதற்கு இயலாமற்போன காணிகள் சார்பில் போகத்திற்கான சேதமாக நிதிசார் நட்டஈடொன்றை வழங்குதல் போன்ற சலுகைகளை வழங்குவதன் மூலம் இந்தக் குடும்பங்களை விரைவாக அப்புறப்படுத்தி கருத்திட்டத்தின் வேலைகளை உரிய காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்வதற்காக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.