• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை நீர்ப்பரப்பில் இயந்திரப் படகுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் இழுவை வலை மீன்பிடித்தல் முறையைத் தடைசெய்தல்
- என்ஜின்களுடனான அல்லது இயந்திர படகுகள் மூலம் இழுவை வலைகளைப் பயன்படுத்தி இலங்கை நீர்பரப்பில் மேற்கொள்ளப்படும் கடற்றொழில் செயற்பாடுகளை (Trawl Fishing Operation) தடைசெய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து, 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பிப்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்ச மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.