• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முச்சக்கரவண்டிகள் மூலம் பயணிகள் போக்குவரத்தினதும் பாடசாலை வான் சேவைகளினதும் தரத்தை மேம்படுத்துதல்
- பிரயாணிகள் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டிகள் மூலமும் பாடசாலை மாணவர்களைக் கொண்டுசெல்லும் வான்கள் மூலமும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக ஒழுங்குறுத்துகை அதிகாரசபையொன்றை தாபிப்பதற்கு 2017 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சுச் செயலாளர்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.