• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அமெரிக்க தூதரகத்திடமிருந்து இரனைவிலவிலுள்ள காணியை மீள உடைமையாக்கிக் கொள்ளல்
- புத்தளம் மாவட்டத்தின் இரனைவில பிரதேசத்தில் அமைந்துள்ள 166.038 ஹெட்டயார் காணித்துண்டொன்றை Voice of America வானொலி நிலையத்தை இலங்கையில் தாபிப்பதற்காக 1991 ஆம் ஆண்டில் அமெரிக்க தூதரகத்திற்கு குத்தகைக்களிக்கப்பட்டது. இந்த குத்தகை உடன்படிக்கைக் காலம் முடிவடைவதற்கு முன்னர் குறித்த வானொலி நிலையத்தை மூடி, இந்த வானொலி நிலையம் அமைந்துள்ள காணியையும் இந்த மனையிடத்திலுள்ள ஏனைய சொத்துக்களையும் இலங்கை அரசாங்கத்திற்கு கையளிக்க எண்ணுவதாக அமெரிக்க தூதரகத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக உரிய குத்தகை உடன்படிக்கையை இரத்துச் செய்து இந்தக் காணித்துண்டையும் இந்த மனையிடத்திலுள்ள ஏனைய சொத்துக்களையும் இலங்கை அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.