• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்குரிய கொள்கைகள் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பு
- பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் தாக்குதல்களிலிருந்து இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பினை வழங்குவதற்கும், இலங்கையின் ஒற்றையாட்சி, இறைமை, தன்னாதிக்கம் என்பவற்றைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பதற்கும், பயங்கரவாத பிரச்சினையிலிருந்து ஏனைய நாடுகள் மற்றும் பிரதேசங்களை பாதுகாப்பதற்கும், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இலங்கையையோ அல்லது அதன் மக்களையோ பயன்படுத்துவதனை தடுப்பதற்கும், பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதனோடிணைந்த குற்றங்களை தடுப்பதற்கும் இனங்காண்பதற்கும் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய பயங்கரவாத செயற்பாடுகள் உட்பட பிற குற்றங்கள் புரிந்த ஆட்களை இனங்காணுதல், கைது செய்தல், தடுத்து வைத்தல், விசாரித்தல், வழக்குத் தொடுத்தல், தண்டனை விதித்தல் சம்பந்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்பு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள "கொள்கை மற்றும் சட்டக்கட்டமைப்பு" தேசிய பாதுகாப்பு பற்றிய பாராளுமன்ற துறை மேற்பார்வை குழுவின் அவதானிப்புரைகளுக்காக இந்த குழுவுக்கு தொடர்புபடுத்துவதற்கும் இந்த கட்டமைப்புக்கு அமைவாக சட்டங்களை வரையும் பணிகளை ஆரம்பிப்பதற்குமாக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.