• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தளை மாவட்டத்தின் கொடிகமுவ குளத்தின் வேலைகள் மேம்பாடு மற்றும் விருத்தி
- மாத்தளை மாவட்டத்தின், நாவுல பிரதேச செயலக அதிகாரப் பிரதேசத்தில் அமைந்துள்ள கொடிகமுவ குளம் சுமார் 45 அடி ஏக்கர் கொள்ளளவு கொண்டதோடு, அதன் நீரைப் பயன்படுத்தி நெல் உட்பட ஏனைய பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. இந்த குளத்தின் கொள்ளளவை 45 அடி ஏக்கரிலிருந்து 202 அடி ஏக்கர் வரை அதிகரிப்பதன் மூலம் நாவுல பிரதேசத்தின் தம்பகல்ல, பம்பரகஹவத்த, ஹலம்பகஹவத்த ஆகிய கிராமங்களில் வசிக்கும் 162 விவசாய குடும்பங்களுக்கு நீர்பாசன வசதிகள் வழங்கப்படுவதனை உறுதி செய்யும் நோக்கில் கொடிகமுவ குளத்தின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு கருத்திட்டத்தை 165.9 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.