• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புற்றுநோய் சங்கத்திற்கு வழங்கப்படும் வருடாந்த கொடையை அதிகரித்தல்
- 1948 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கை புற்றுநோய் சங்கமானது புற்றுநோய் காரணமாக உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சேவையாற்றும் தொண்டர் நிறுவனமொன்றாகும். பலவேறுபட்ட கொடையாளிகளின் உதவியின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பல்வேறு செயற்பாடுகள் மூலம் உதவுவது இந்த சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, கடுமையான புற்றுநோய் நோயாளிகளுக்காக நடாத்திச் செல்லப்படும் "சாந்த செவன" மற்றும் "பண்டாரநாயக்க ஞாபகார்த்த புற்றுநோய் இல்லம்" என்பவற்றின் ஊடாக நோயாளிகளுக்கான உதவிச் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றது. இந்த புற்றுநோய் இல்லங்களின் திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான அனுசரணையாளர்களாகவும் தொண்டர் அமைப்பொன்றாகவும் இலங்கை புற்றுநோய் சங்கத்தினால் நிறைவேற்றப்படும் சேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த சங்கத்துக்கு அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் கொடையை 550,000/- ரூபாவிலிருந்து 2,000,000/- ரூபா வரை அதிகரிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.