• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் விஞ்ஞான தொழினுட்பவியல் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கை
- உணவு மற்றும் மூலிகை செடி தொழினுட்பம், உயிரின தொழினுட்பம், நனோ தொழினுட்பம் மற்றும் உயர் பொருள் தொழினுட்பம் போன்ற துறைகளுக்கு உரியதாக தொழினுட்ப அபிவிருத்தி கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், கூட்டு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆளணி பரிமாற்றம் புதிய கருத்திட்டங்களின் முகாமைத்துவம் போன்ற விடயங்களின் போது இரு நாடுகளினதும் ஒத்துழைப்பினை உயர்த்துவதற்கு இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் 2017 சனவரி மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை ஈரானுக்கு மேற்கொள்ளப்படும் அவருடைய உத்தியோகபூர்வ விஜயத்தின்போது கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.